×

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா பரவிய மாநிலம் கேரளா ஆகும். இதையடுத்து பல்வேறு மாநிலங்களுக்கு தொற்று பரவினாலும் தற்போது பெரும்பாலானா மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதேவேளையில் கேரளாவில் இன்னும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. தற்போதுவரை பாதிப்பு உச்சத்தை தொட்ட நிலையில் தன் உள்ளது. அதன்படி கடந்த 2 மாதமாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம்முதல் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின் கேரளாவில் கொரோனா அதிகரித்து சி வரும் நிலையில் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில்; கேரளாவின் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவதுடன் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மராட்டியத்தில் பண்டிகை நாட்களில் கூட்டத்தை தவிர்க்க கட்டுப்பாடுகளை விதிக்கலாம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Tags : Kerala ,Union government , Corona restrictions in Kerala should be closely monitored: Union Government Order
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு