×

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு குறித்த விசாரணை நியாயமாக நடைபெற துறை தலைவர் திரிபாதியை நீக்குக : ஒன்றிய அமைச்சருக்கு பரபரப்பு கடிதம்

சென்னை : சென்னை ஐஐடியில் எழுந்துள்ள சாதிய பாகுபாடு புகார் குறித்து விசாரிக்கும் குழுவுக்கு குற்றச்சாட்டிற்கு ஆளான துறை தலைவரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் விபின் வீட்டில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் விபின் வீட்டில் பணியில் இருந்து விலகுவதாக கல்லூரி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து, சாதிய பாகுபாடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை ஐஐடி நிர்வாகம் அமைத்துள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் விபின் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் சென்னை ஐஐடி நிர்வாகம் அமைத்துள்ள 3 பேர் குழு மற்றும் விரிவுரையாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பாளராக குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் ஒருவருமான மானுடவியல் துறை தலைவர் ஜோதிர்மய திரிபாதி நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.இதன் காரணமாக விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ள விபின்,விரிவுரையாளர்கள் உண்மையை கூறவிடாமல் திரிபாதி தடுப்பார் என்று கூறியுள்ளார்.எனவே நேர்மையான விசாரணை நடைபெற மானுடவியல் மற்றும் சமூகவியல் தலைவர் திரிபாதி சாதிய பாகுபாடு விசாரணை முடியும் வரை தற்காலிகமாக பதவி விலக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஐஐடி நிர்வாகத்திற்கு ஏற்கனவே முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்று கூறியுள்ள பேராசிரியர் விபின் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Chairman Tripathi ,Chennai , விபின் வீட்டில்
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...