இன்னும் 5 ஆண்டுகளில் அதானி இந்தியாவாக மாறும்: சீமான் காட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த கொள்கையை பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுக ஆதரிக்கிறது. இழப்பில் இருந்த வங்கிகளை ஒன்றிய அரசு அரசுடமையாக்கியது. ஆனால் லாபத்தில் இருந்த எல்ஐசி நிறுவனத்தை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்.

அதானி ஃபாம், அதானி ஏர்போர்ட், அதானி குவாட்ரஸ், அதானி துறைமுகம் போன்று 5 ஆண்டுகளில் இந்தியாவும் அதானி இந்தியாவாக மாறிவிடும். நாட்டின் முதல் குடிமகனான ராம்நாத் கோவிந்தையே கோயில் உள்ளே அனுமதிக்காத நிலை தான் இருந்து வருகிறது. மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்கு பல ஒப்பந்தங்களை அதானி, அம்பானி, வேதாந்தா நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>