வீட்டுக்குள் புகுந்து சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது

அம்பத்தூர்: அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அம்பத்தூர் வரதராஜபுரம் பத்மநாபன் நாயுடு தெருவை சேர்ந்தவர் அகிலன்பாலாஜி (29). இவர் பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் 12 வயது சிறுமி தாயுடன் வசித்து வருகிறாள். நேற்று காலை வழக்கம்போல் தாய் வேலைக்கு சென்றுவிட்டதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதை பயன்படுத்தி அகிலன் பாலாஜி, சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தாய் வந்ததும் நடந்தது பற்றி சிறுமி தெரிவித்து அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி,  அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் அகிலன் பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>