தமாகாவினர் பேனர் பயன்படுத்த வேண்டாம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமாகா தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் இனிவரும் காலங்களில் இயக்கம் சம்பந்தமாக கட்-அவுட்டுகள், பேனர்கள் பயன்படுத்த வேண்டாம். வரும் 30ம் தேதி மூப்பனாரின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம், மூப்பனார் நினைவிடத்தில் தமாகா சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட தமாகாவினர் புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.

தமிழகம் முழுவதும் அவரவர் சார்ந்த மாவட்ட, வட்டார, நகர, கிராமப்புற பகுதிகளில் மூப்பனாரின் நினைவு தினத்தை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை கடைபிடித்து நடத்துமாறு கேட்டு கொள்கிறேன். இனி வரும் காலங்களில் கட்-அவுட்டுகள், பேனர்கள் ஆகியவற்றை இயக்கம் சார்ந்த எந்த நிகழ்வுக்கும் பயன்படுத்த வேண்டாம்.

Related Stories:

More