இந்தியாவை முன்னேற்றுதல்: மோடி அரசின் 7 ஆண்டுகள்’ என்ற தமது புத்தகத்தை பிரதமரிடம் வழங்கினார் கே ஜே அல்ஃபோன்ஸ்

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் திரு  கே ஜே அல்ஃபோன்ஸ், ‘இந்தியாவை முன்னேற்றுதல்: மோடி அரசின் 7 ஆண்டுகள் என்ற தமது புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். ‘இந்தியாவை முன்னேற்றுதல்’ என்ற அவரது புத்தகத்தில் இந்தியாவின் சீர்திருத்த பயணத்தின் அம்சங்களை எடுத்துரைப்பதற்கு போற்றத்தக்க முயற்சியை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ ‘இந்தியாவை முன்னேற்றுதல்’ என்ற தமது புத்தகத்தில் இந்தியாவின் சீர்திருத்த பயணத்தின் அம்சங்களை வெளிப்படுத்துவதற்கு போற்றத்தக்க முயற்சியை எனது மதிப்புமிகு நண்பர் திரு கே ஜே அல்ஃபோன்ஸ் மேற்கொண்டுள்ளார். அவரிடமிருந்து பிரதியைப் பெறுவதில் உவகை அடைகிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>