தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தூய்மைப்பணி

தா.பழூர் : தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானம் பள்ளி நாட்களில் மாணவர்கள் பயன்படுத்தி வரும் காலகட்டங்களில் இதில் அதிகப்படியாக குப்பைகள் மற்றும் புல் பூண்டுகள் சேராமல் இருந்து வந்தது.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இல்லாத நிலையில் விளையாட்டு மைதானத்தில் புல் பூண்டுகள், முற்செடிகள் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக காணப்பட்டது. இந்த விளையாட்டு மைதானத்தில் காவல்துறை மற்றும் ராணுவத்தில் சேருவதற்கு இளைஞர்கள் காலை மற்றும் மாலை வேளையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் இதில் விளையாடி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அதிகாலை வேளையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பலர் நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் விளையாட்டு மைதானத்திற்குள் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே கிடந்து வந்தது. மேலும் மது பிரியர்கள் மது பாட்டில்களும் ஆங்காங்கே கிடந்தது. இதனால் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த பூண்டு செடிகள், முற்செடிகள், பிளாஸ்டிக் பைகள், மதுபாட்டில்களை ஆர்சிசி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்தனர். இளைஞர்களின் இந்த செயலை அப்பகுதியில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: