1ம் தேதி முதல் திறக்க முன்னேற்பாடு அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தூய்மைப்பணி-மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

பெரம்பலூர் : செப்டம்பர் 1ம் தேதி முதல் பெ ரம்பலூர் மாவட்டத்தில் 144 அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக ளில் 32,099 மாணவ, மாணவியர் பள்ளிக்குவருவதற்கு வகுப்பறைகளில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை மாவட்ட முதன்மைக் கல் வி அலுவலர் அறிவழகன் பள்ளிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடை காரண மாக கடந்த ஆண்டு மூடப் பட்ட பள்ளிகள் இன்னும் மு ழுமையாக திறக்கப் படா மல் உள்ளது. இந்நிலை யில் படிப்படியாக கொரோ னா வைரஸ் பெருந்தொ ற்று தமிழக அரசின் தீவிர தடுப்பு மற்றும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளால் ஓரளவு கட்டுக்குள் கொண் டுவரப் பட்டுள்ளதால், மத் திய, மாநில அரசுகள் பல் வேறு தளர்வுகளுக்கு பின் னர் பிறப்பித்த உத்ரவின் படி, நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டுக்கு வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முத ல்கட்டமாக 9,10,11,12 வகுப் புகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்ப ட்டு திறக்க ஏற்பாடு செய்ய ப் பட்டுள்ளது.

இதன்படி பெரம்பலூர் மா வட்டத்தில் 66 அனைத்துவ கை உயர்நிலைப் பள்ளி கள், 78 அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமுள்ள 144 உய ர்நிலை மேல்நிலைப் பள் ளிகளில் 9ஆம் வகுப்பு படி க்கும் 8,368பேர், 10ஆம் வகு ப்பில் படிக்கும் 8,140 பேர், 11ஆம் வகுப்பில் படிக்கும் 7,705 பேர், 12ஆம் வகுப்பில் படிக்கும் 7,886பேர் என மொ த்தம் 32,099 மாணவ,மாண வியர் செப்டம்பர் 1ஆம் தே தி முதல் தினமும் 50 சதவீத எண்ணிக்கையில் வகுப்பு க்கு வந்துசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் அரசு உயர்நிலை ப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளி ல் நேற்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சத்திரமனை தமயந்தி, வேலூர் (பொ) ராஜா ஆகியோரிடம், பள்ளி திறக்கும் முன்பாக மாண வர்களின் அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். வகுப்பறைகள் தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தியிருக்க வேண்டும்.ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மா ணவ, மாணவியர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனஅறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் மாரிமீனாள், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் பழனிச்சாமி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சத்திரமனை தமயந்தி, வேலூர்(பொ) ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>