இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 22 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெரும்பண்ணையூர், முத்துப்பேட்டை, ஆலங்குடி, அடியக்கமங்கலம், எடையூர் சங்கேந்தி, வடுவூர், திருவிழிமிழலை, உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை, பூந்தோட்டம் மற்றும் ஆலத்தம்பாடி ஆகிய 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, ரெட்கிராஸ் தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>