×

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரிப்பு: கோவை எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கோவை: கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தொற்று மிக தீவிரமாக பரவி வரக்கூடிய நிலையில் கேரள கோவை எல்லைப்பகுதியில் தமிழக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே எல்லை பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள சூழலில் தற்போது அண்டை மாநிலமாக உள்ள கேரளாவில் கடந்த சிலை தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நேற்றைய தினம் ஒருநாள் பாதிப்பு 31,445ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்திலும் 30,000ஐ கடந்துள்ள நிலையில் தற்போது கோவை எல்லையில் உள்ள வாளையாறு உள்ளிட்ட 13 சோதனைசாவடிகளில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் கேரளாவில் இருந்து கோவை வரும் அனைவரையும் சோதனை செய்து அதன் பின்னரே அனுமதிக்கின்றனர்.

கேரளாவில் இருந்து கோவை வருவோர் கட்டாயமாக 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதேபோல இ-பதிவும் செய்திருக்க வேண்டும். அதன் பின்னரே கோவை மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர். கோவை மாவட்டம் கொரோனா 2ஆம் அலையில் அதிகளவு பாதிப்பை சந்தித்தது. தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கோவையில் தினசரி பாதிப்பு 200க்கும் குறைவாக உள்ள சூழலில் அருகாமையில் உள்ள கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. சான்றிதழ் இல்லாமல் வருவோர் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Tags : Kerala ,Coimbatore , corona
× RELATED கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்...