×

நாகர்கோவில் - தாம்பரம் ரயில் 10 நிமிடங்கள் முன்னதாக இயக்கம் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

*தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை : தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் பல்வேறு ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடியிலிருந்து இதுவரை மாலை 4.25 மணிக்கு புறப்பட்ட வண்டி எண் 06235 தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் இனி மாலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 5.45 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 6.15 மணிக்கும், சாத்தூரிலிருந்து மாலை 6.35 மணிக்கும், விருதுநகரில் இருந்து இரவு 7.00 மணிக்கும், திருமங்கலத்தில் இருந்து இரவு 7.23 மணிக்கும், திருப்பரங்குன்றத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கும், மதுரையில் இருந்து இரவு 7.45 மணிக்கு பதிலாக இரவு 8.05 மணிக்கும், சோழவந்தானில் இருந்து இரவு 8.25 மணிக்கும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.45 மணிக்கும், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.25 மணிக்கும் புறப்படும் படி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண் 06192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா சிறப்பு ரயில் நெல்லை ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிடங்களுக்கு முன்னதாக புறப்படும் படி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் நெல்லையில் இருந்து 5.15 மணிக்கு பதிலாக 10 நிமிடங்கள் முன்னதாக மாலை 5.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் கோவில்பட்டியிலிருந்து மாலை 6 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 6.40 மணிக்கும், மதுரையில் இருந்து இரவு 7.55 மணிக்கும் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.10 மணிக்கும் புறப்படும் படி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டி எண்  06066 நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து மாலை 6.20 மணிக்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு புறப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Nagercoil ,Tambaram ,Thoothukudi ,Mysore , Toothukudi, Mysore, Train Timing ,Southern railway
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்