×

இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!!

சென்னை : இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது பள்ளியில் பணி செய்யும் அனைவரும் தடுப்பூசித் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆசிரியர்களின் குடும்ப நபர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். 80% ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்; மாணவர்கள் பாதுகாப்பிற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளனர்; பள்ளிகளை திறக்காவிட்டால் குழந்தைகளின் கல்வி கேள்விக் குறியாகிவிடும்

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்றுதான் 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது‌. புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் அரியலூரில் கர்ப்பிணிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. சென்னையில் ஆசிரியர்களுக்கு 90.11%, ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 89.32% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 3,01,75,410 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 13 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

Tags : India ,Minister ,Ma. ,Subramanian , அமைச்சர் மா.சுப்பிரமணியன்
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...