×

ஆப்கனில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம்

காபூல் : ஆப்கனில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிப்பதாகவும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயம் அடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களையும் உலக நாடுகள் ஒற்றுமையாக எதிர்த்து நிக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா.பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ், தனது சிறப்பு பிரதிநிதியை காபூல் அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், காபூலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு முதலில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.ஆப்கனியர்கள் மற்றும் அங்கு உதவி செய்தவர்கள், ஆப்கனியர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மற்றவர்களின் உயிர்களை காப்பதற்கு சேவை செய்தவர்களும் உயிரிழந்துள்ளனர்,என்றார்.

காபூலில் காத்திருக்கும் மக்களை மீட்கும் பணி இறுதி வரை தொடர வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் உணர்த்துவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இது போன்ற ஒரு சோக சம்பவம் இனி ஒரு போதும் நடக்க அனுமதிக்கப்பட கூடாது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.காபூலில் மீட்புப் பணியில் இருந்த பிரான்ஸ் குழுவினர் மற்றும் ஆப்கன் மக்களின் நிலையை எண்ணி வருந்துவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.இந்த நாள் ஆப்கன் மக்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்குமே கடினமான நாள் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கூறியுள்ளார்.    


Tags : India ,IS ,Afghanistan , ஐஎஸ் தீவிரவாதிகள்
× RELATED பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை...