×

பாரா ஒலிம்பிக் இந்தியாவுக்கு முதல் வெற்றி: பவினா அசத்தல்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் லீக் சுற்றில் வெற்றிப் பெற்ற  இந்திய வீராங்கனை பவினாபென் படேல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். டோக்கியோவில்  நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில்  இந்திய வீராங்கனைகள் டேபிள்  டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு  முதல் லீக் ஆட்டங்களில் நேற்று முன்தினம் களம்  கண்டனர். அதில்  பவீனாபென் படேல், சோனல்பென் படேல் இருவரும் சீன விராங்கனைகளிடம் தோல்வி  அடைந்தனர். இந்நிலையில் நடந்த 2வது லீக் ஆட்டத்தில்  பவீனாபென் படேல் நேற்று பிரிட்டன் வீராங்கனை மேகன் ஷக்லெடனுடன் மோதினார்.

முதல் செட்டை  11-7 என்ற புள்ளி கணக்கில்  வென்று பவீனா நம்பிக்கை  அளித்தார். அதற்கு பதிலடியாக 2வது செட்டை மேகன் 11-9 என போராடி வென்றார்.  ஆளுக்கொரு செட்டை கைப்பற்ற அடு்த்த 2 செட்களில் அனல் பறந்தது. பவீனா  கடுமையாக போராடி 17-15, 13-11 என்ற  புள்ளி க ணக்கில் 2 செட்களையும்  வசப்படுத்தினார். அதனால் 41நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 3-1 என்ற  கணக்கில்   கைப்பற்றி  பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் வெற்றியை பதிவு  செய்தார். கூடவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

சீனா முந்தியது...
போட்டியின் 2வது நாளான நேற்று 6 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்ளுடன் சீனா, பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை  பிடித்தது. ஆஸ்திரேலியா 6 தங்கம், 2வெள்ளி, 5வெண்கலம் என 13பதக்கங்களை கைப்பற்றி 2வது இடத்துக்கு பின்தங்கியது. பிரிட்டன் 5 தங்கம், 7 வெள்ளி, 3வெண்கலம் 15 பதக்கங்களுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது.

Tags : Paralympic India ,Pavina Asathal , Paralympics, India, victory, Pavina
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1