மகா பெரியவர் மணி மண்டபத்தில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில்  மகா பெரியவரர் சந்திரசேகரேந்திரர் மணி மண்டபம் அமைந்துள்ளது. இங்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கடந்த ஜூலை 24ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை தங்கி சாதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறார். இந்நாட்களின் போது மணிமண்டபத்துக்கு வரும் பக்தர்கள் பார்வையிடுவதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனம் சார்பில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன் தலைமை தாங்கி, கண்காட்சியை திறந்து வைத்தார். டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவன தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இந்த  கண்காட்சி நேற்று முதல் வரும் செப்டம்பர் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இறைநெறி ஓவியர்  மணிவேலு வரைந்த ஓவியங்கள் 100க்கும் மேற்பட்டவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

Related Stories: