செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம்: சங்க மாநாட்டில் கோரிக்கை

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க 8வது மாவட்ட மாநாடு செங்கல்பட்டு அடுத்த சிங்க பெருமாள் கோயிலில் நடந்தது. மாவட்ட தலைவர் என்.மோகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் இ.ராமமூர்த்தி வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.பகத்சிங்தாஸ், மாநாட்டை துவக்கி வைத்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாபு  வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் எம்.கலைச்செல்வி, வரவு செலவு அறிக்கையும் சமர்பித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.மோகனன், சிஐடியு மாவட்ட தலைவர் கே.சேஷாத்திரி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பி.சண்முகம், மாநில தலைவர் ஆர்.சிங்காாரவேலர்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, புதிய நிர்வாகிகளாக செங்கல்பட்டு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவராக சி.செல்வக்குமார், மாவட்ட செயலாளர் டி.பாபு, பொருளாளர் வேணுகோபால் ஆகியோர் அடங்கிய 40 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், கட்டுமான  பொருட்களின்  விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 60 வயது முடிந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 அயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டி தரவேண்டும்.

கணவனை இழந்த பெண்களுக்கு பென்ஷன் வழங்குவதுடன் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்என்பன  உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>