அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே, அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து  பொதுமக்கள் தினமும் சளி, இருமல், காய்ச்சல் உள்பட பல்வேறு உடல் உபாதைகள் சம்பந்தமாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தினமும் வெளி நோயாளிகள் எத்தனை பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கொரோனா தடுப்பூசிகள் தினமும் எத்தனை போடப்படுகிறது. உள்நோயாளிகளாக எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

அறுவை சிகிச்சை அரங்கம் எந்த நிலையில் உள்ளது. மருத்துவ ஊழியர்கள் எத்தனை பேர் பணிக்கு வருகின்றனர். நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா, மருத்துவமனைக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மருத்துவ அலுவலர் ராஜேந்திரபிரசாத், மருத்துவர் பூர்ணிமா உள்பட மருத்துவமனை ஊழியர்கள் பலர் இருந்தனர்.

Related Stories:

>