வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

புழல்: செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், திருட்டு, அரிசி முதலான உணவுப்பொருள் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் உட்பட  பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ, மினி லோடு வேன்,லாரி, டூ வீலர் என, 86 வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் கடந்த நான்காண்டுகளாக உள்ளது .இந்த  வாகனங்களை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், நேற்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில் மாதவரம் மாநகர போக்குவரத்து கழக மண்டல அதிகாரி பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் அரசு தானியங்கி பணிமனை பொறியாளர் மோகன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கருப்பையன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மதியம் ஏலம் விடப்பட்டது. இதில், 16 பேர் கலந்துகொண்டு ஏலம் கேட்டனர். ஏலம் விடப்பட்ட 86 வாகனங்கள் 13 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Related Stories:

>