ஒன்றிய அரசு விற்பனையில் மும்முரம் : ராகுல்காந்தி காட்டம்

புதுடெல்லி: ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற ஒன்றிய அரசுக்குச் சொந்தமான சொத்துகளைத் தனியாருக்கு குத்தகைக்கு அளிப்பதன் மூலம் ரூ. 6 லட்சம் கோடியைத் திரட்டும் திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில், ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

கொரோனாவின் அடுத்த அலையின் தீவிர விளைவுகளைத் தவிர்க்க தடுப்பூசி போடுதலை அதிகப்படுத்த வேண்டும். ஆனால், ஒன்றிய அரசோ விற்பனையில் மும்முரமாக இருப்பதால், மக்களாகிய நீங்கள் தயவுசெய்து நீங்களே உங்களை பாதுகாத்துக்கொளுங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: