×

ஆப்கானில் நிருபர் மீது தாக்குதல்: தலிபான்கள் கொன்றதாக வதந்தி

காபூல்: ஆப்கானில் நிருபர் ஒருவர் தலிபான்களால் தாக்கப்பட்ட நிலையில், அவரை தலிபான்கள் கொன்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், சர்வதேச பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ‘டோலோ’ நியூஸ் பத்திரிகையாளர் ஜியார் யாத் தலிபான் என்பவர் தலிபான்களால் தாக்கப்பட்டார். மேலும் அவரது கேமரா, மொபைல் போன் உள்ளிட்டவை தீவிரவாதிகளால் பறிக்கப்பட்டது. அவர், திடீரென மாயமானதால் ஜியார் யாத்தை தலிபான்கள் சுட்டுக் கொன்றதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. ஆனால், ஜியார் யாத் தனது மரணம் குறித்த செய்திகளை மறுத்து டுவிட் செய்துள்ளார்.

அதில், ‘காபூலில் நான் தலிபான்களால் தாக்கப்பட்டேன். என்னுடைய கேமரா உள்ளிட்ட உபகரணங்களை பறித்துக் கொண்டனர். சிலர் நான் கொல்லப்பட்டதாக செய்தியைப் பரப்பி வருகின்றனர். தலிபான்கள் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று தாக்கியது உண்மைதான். எதற்காக என்னை கடத்தி வந்தீர்கள் என்று கேட்டேன். சிறிது நேரத்தில் விடுவித்தனர். என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எவ்வித நடவடிக்கையும் தலிபான் தலைவர்கள் எடுக்கவில்லை. இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்’ என்று பதிவிட்டுள்ளார்.



Tags : Afghanistan ,Taliban , In Afghanistan, the reporter, the attack, the Taliban
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை