×

கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல; தொற்றின் வீரியத்தை குறைக்கிறது: ஒன்றிய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல; தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பை 98.99% தடுப்பதில் தடுப்பூசி பலனளிக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத இடங்களில் பாதிப்பு அதிகரிப்பதை காண முடிகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் இடைவெளியை குறைப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

Tags : Union Government , Corona vaccine
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...