திருச்சி படைக்கல தொழிற்சாலையில் 75வது சுதந்திர தினம் நினைவாக திருச்சி அசால்ட் ரைபிளின் வகை துப்பாக்கி அறிமுகம்

திருச்சி: திருச்சி படைக்கல தொழிற்சாலையில் 75வது சுதந்திர தினம் நினைவாக திருச்சி அசால்ட் ரைபிளின்  வகை துப்பாக்கி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. படைக்கல தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர், சஞ்சய் திவேதி புதிய வகை துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார்.  7.62x39 மிமீ அளவு கொண்ட திருச்சி அசால்ட் ரைபிள் டிஏஆர் ஒரு சக்திவாய்ந்த தனிப்பட்ட தானியங்கி துப்பாக்கி ஆகும். இது ஒற்றை மற்றும் தானியங்கி துப்பாக்கி சூடு முறையில் எதிரிகளை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண முறையில் ஒற்றை ஷாட் ரைபிள் ஆகும். இதனை பர்ஸ்ட் மோடிலும் பயன்படுத்தப்படலாம். குறுகிய தொடர் முறையில் பயன்படுத்துவதன் மூலம் 500 மீ வரையில் உள்ள குழு அல்லது ஒற்றை இலக்குகளை அழிக்க முடியும்.

 சிஏபிஎப் பிரிவுகள், மாநில காவல்துறை மற்றும் ஆர்பிஎப் காவலர் மற்றும் ரோந்து பணியில் உள்ள வீரர்களின் விரைவான மற்றும் எளிமையான இயக்கத்திற்கு டவுன் மடிப்பு பட் பதிப்பு தேவைப்படுவதால் படைக்கல தொழிற்சாலை இதை தயாரித்துள்ளது. இதன் ஒட்டுமொத்த நீளம் திறந்த நிலையில் 900 மிமீ மற்றும் மடிப்பு 650 மிமீ ஆகும். திருச்சி படைக்கல தொழிற்சாலையில் ஏற்கனவே நிலையான பட் மற்றும் பக்க மடிப்பு பட் ஆகிய இரண்டு வகைகளில் திருச்சி அசால்ட் ரைபிள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More