காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு இல்லை - டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: அமெரிக்கா அவர்களுடைய படைகளை ஆப்கானில் இருந்து வெளியேற்றி வருகிறது. காபூல் விமான நிலையத்தில் தற்போது பாதுகாப்பு இல்லை என்று எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா பேட்டியளித்துள்ளனர். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து, முஸ்லீம்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு தேவை. ஆப்கானிஸ்தானுடனான நீண்ட கால நல்லுறவை பேணுவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு 20 ஆண்டுகால இந்தியாவின் உழைப்பை வீணடித்துவிடக் கூடாது. ஆப்கான் விவகாரத்தில் மிக கவனத்துடன் இந்தியா முடிவெடுக்கும் நிலையில் உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Related Stories:

>