×

எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தாரணியின் படைப்புகளை மீண்டும் டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கவும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது; டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு.

இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும். பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Bama ,Sukirdarani ,Delhi University ,Q. ,Stalin , Include the works of writer Bama and poet Sukirtarani in the Delhi University syllabus: Chief Minister MK Stalin's statement
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...