×

பெரம்பலூரில் சாலையில் கதிரடித்த சறுகுகளை பாலத்தின் அடியில் வீசும் அவலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் வடக்கு மாதவி பாலத்தின் அடியில் கதிரடிக்கும் சறுகுகளை கொட்டுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுவதால் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்திருந்த எள், துவரை, கொள்ளு, சோளம், கம்பு பயிர்கள் தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ளன. இவற்றை வயல் களில் இருந்து அறுவடை செய்யும் விவசாயிகள் அவற்றை வயல்களிலேயே காயவைத்தப் பிறகு கதிரடிக்க சாலைகளையும், அதிலுள்ள பாலங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் நசுக்கும்போது சாலைகளில் கொட்டப்பட்டுள்ள காய்ந்த பயிர்களில், கதிர்களில் உள்ள தானியங்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்படுகிறது.

அதில் தானியங்களை சுத்தமாகப் பிரித்தெடுக்கும் விவசாயிகள், எஞ்சிய சறுகுகளை, சக்கைகளை சாலையோரத்தில், பாலத்துக்கு அடியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். சிலர் சக்கைகளை சாலையோரத்தில் எரிப்பதற்காக தீயை வைத்துவிட்டு அணைக்காமல் சென்று விடுவதால் அருகிலுள்ள நூற்றாண்டு புளிய மரங்கள் எரிந்து சாம்பலாகும் நிலை ஏற்படுகிறது. அதோடு மலைபோல் கொட்டி வைக்கப்படும் எள், கம்பு, சோள சக்கைகள் பாலத்தின் நீர் வழித் தடங்களை அடைத்துக்கொ ள்ளும்போது தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. இதனால் நெடுஞ்சாலை, ஊர்ப்புற சாலைகளில் கதிரடிக்கும் சிறு விவசாயிகள் சக்கைகளை அவர்களே அப்புறப்படுத்திச் செல்ல, சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையோ, ஒன்றிய நிர்வாகமோ வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Perambalur , In Perambalur, it is a pity to throw the skates under the bridge
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...