திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பெயர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கலை கல்லூரி என பெயர் மாற்றப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பெயர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கலை கல்லூரி என பெயர் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் பேசினார். கலசப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் கோரிக்கையை ஏற்று அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கலசபாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை திருவண்ணாமலை கலை கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என  கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று பெயர் சூட்டப்படும் என அமைச்சர் பொன்முடி பேரவயைில் அறிவித்தார். கருணாநிதி பெயர் அறிவித்ததற்கு திருவண்ணாமலை மக்கள் சார்பில் நன்றி என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Related Stories:

More
>