×

தமிழகம், புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, புதுச்சேரி மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

Tags : Vandachcheri, Tamil Nadu ,Chennai Weather Centre , Heavy rain
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 5...