×

புதுக்கோட்டையில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் மின்கசிவால் தீ விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு ராஜவீதியில் ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கில் தீப்பற்றியது. எண்ணெய் கிடங்கில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தீப்பற்றி எரிகிறது. தெற்கு ராஜவீதியில் கடைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த பகுதியில் தீவிபத்து நேரிட்டதால் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து அதிக வெப்பத்துடன் எரிவதால் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


Tags : Pudukkottai , Fire accident
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...