வாகனங்களை பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்: போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: வாகனங்களை பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப். 1 முதல் விற்க்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் அடிப்படையில் காப்பீடு செய்ய வேண்டும். வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும். தமிழக போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காப்பீடு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. புதிய வாகனம் எவ்வாறு இயங்கும் என்பதில் காட்டும் ஆர்வத்தை காப்பீடு நடைமுறைகளில் காட்டுவதில்லை என ஐகோா்ட் வேதனை தெரிவித்துள்ளது. காப்பீடு தொடர்பான விவரங்களை விற்பனையாளர்கள் முழுமையாக தெரிவிப்பதில்லை என ஐகோர்ட் கூறியுள்ளது. எனவே வரும் செப்.1 முதல் புதிதாக வாங்கும் அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுக்கு காப்பீடு திட்டம் கட்டாயமாக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>