கமுதி: 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கூட்டுறவு வங்கி

கமுதி: கமுதி அருகே காவடிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 2017ல் நகைக்கடன் தள்ளுபடியில் மோசடி தொடர்பாக வங்கியின் செயலர் மீனாட்சி சுந்தரம் இடைநீக்கம் செய்யப்பட்டார். புதிய செயலர் நியமிக்கப்படாமல் கடந்த 4 ஆண்டுகளாக காவடிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூடப்பட்டுள்ளது. காவடிப்பட்டி, மேலராமநதி, கோரைப்பள்ளம், பாறைக்குளம், மூலக்கரைப்பட்டியை சேர்ந்த 1,600 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்டுள்ள வங்கியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பராமரிப்பின்றி புதர் மண்டியுள்ளது. பயிர்க்கடன், உரக்கடன் உள்பட அரசின் சலுகைகள், மானியங்களை பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Related Stories: