புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தமிழில் உரையாற்றினார். புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. புதுச்சேரியில் வேளாண்துறையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என உரையாற்றினார். திருக்குறளுடன் தனது உரையை தொடங்கிய தமிழிசை அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். 250 காய்கறி விதைப்பைகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 11 டிராக்டர்கள், 9 பவர் டிரில்லர்கள், நெல் நடவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
வருவாயை பெருக்கும் வகையில் புதுச்சேரி பட்ஜெட் இருக்கும் என்று நம்புகிறேன் என கூறினார். புதுச்சேரியில் 2020-21-ல் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் எதிர்பார்த்த நிலையில் ரூ.8,419 கோடி வந்துள்ளது. மாடித்தோட்டத்தை ஊக்குவிக்க ரூ.3,000 மதிப்புள்ள விதைகள் அடங்கிய பைகன் 75% மானியத்தில் வழங்கப்படும். அரசு எடுத்த துரித நடவடிக்கையால் புதுச்சேரியில் கொரோனா பெருமளவு குறைந்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக தமிழில் ஆளுநர் உரையாற்றினார். புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கை இன்று மாலை தாக்கல் செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் ஆளுநர் உரையும், பட்ஜெட் தாக்கலும் ஒரே நாளில் வருவது இதுவே முதல்முறையாகும்.