தீவிரவாதிகள் ஊடுருவல்? தொண்டி கடற்கரையில் தேடுதல் வேட்டை

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் பரவியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மாவட்ட எஸ்பி கார்த்தி தலைமையில் கியூ பிராஞ்ச் உள்ளிட்ட அனைத்து தரப்பு போலீசாரும் கடற்கரை பகுதிகள் முழுவதும் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பின்பே இது புரளி என தெரிந்தது. அதன்பின்பே போலீசார் திரும்பி சென்றனர். போலீசாரின் தேடுதல் வேட்டையால் இரவு முழுவதும் தொண்டி, நம்புதாளை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories:

>