மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு உடற்கல்வி ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறைதண்டனை: திருவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட் அதிரடி

திருவில்லிபுத்தூர்: நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் உள்ள சிவஞானபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்ச்செல்வன் (48). இவர் கடந்த 2018ல் விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் நடைபெற்ற கபடி போட்டியில்  கலந்துகொள்ள வந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக  புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வனுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.50 ஆயிரம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

More
>