×

குடிமை பொருள் குற்றபுலனாய்வுத்துறைக்கு திருச்சி, கோயம்புத்தூரில் 2 மண்டலங்கள் அமையும்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பு:
* காவல்துறையில் உள்ள நான்கு மண்டலங்களைப் போல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையில் உள்ள இரண்டு மண்டலங்களை நான்கு மண்டலங்களாக்கி திருச்சி மற்றும் கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் புதிய மண்டலங்கள் தோற்றுவிக்கப்படும்.
* புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் அலகுகள் ஏற்படுத்தப்படும்.
* பொருட்களின் நகர்வினைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறை ஒன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகத்தில் நிறுவப்படும்.
* குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் பணியாற்றும் காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

Tags : Civil Criminal Investigation Department ,Trichy ,Coimbatore ,Minister ,Chakrabarty , There will be 2 zones for the CID in Trichy and Coimbatore: Minister Chakrabarty
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்