சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் இலவச சட்ட விழப்புணர்வு முகாம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முகாமில் உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியும் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான பிரேம்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், பெண்களுக்கு பாலியல் பிரச்னைகளுக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது, அரசின் திட்டங்களை சட்டத்தின் மூலம் பெறுவது, மேலும் சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்னைகளை எளிதில் தீர்வு காண வட்ட சட்ட பணிகள் குழுவில் மனுக்கள் கொடுத்து கிராம மக்கள் பயனடையும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ற மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை நீதிபதி பிரேம்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மணி, கிருஷ்ணன், கண்ணபிரான், தினேஷ் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>