×

நாவலூர் அருகே குட்கா தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் தப்பி ஓட்டம்; ஒருவர் கைது

திருப்போரூர்: சென்னை அருகே புறநகர் பகுதியான நாவலூர், தாழம்பூர், காரணை, சிறுசேரி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், வெளி மாநில ஆட்கள் மூலம் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு எஸ்.பி. விஜயகுமார், மாமல்லபுரம் டி.எஸ்.பி. குணசேகரன் ஆகியோர் உத்தரவின் பேரில் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று காரணை, தாழம்பூர் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் காரணை கிராமத்தில் தனி வீடு ஒன்றில் குட்கா தயாரிப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்த 2 கிரைண்டர், 200 கிலோ குட்கா, மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் இருந்த காரணையைச் சேர்ந்த சுபாஷ் (26) என்பவனை கைது செய்தனர். மேலும், குட்கா தயாரிப்பில் ஈடுபட்ட ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி தியாதேவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இது சம்பந்தமாக தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Gutka ,Nawalur , Gutka manufacturing plant discovery near Nawalur: 2 escapees; One arrested
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது