காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட் டத்தில் மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்க முன்னேற்பாடு குறித்த பணிககளை கலெக்டர் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள சேர்மன் சுவாமிநாதன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளி, பிஎஸ் சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆற்காடு நாராயணசாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பள்ளிகளில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர், அங்கிருந்த ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியத்தையும், நன்மைகளையும் எடுத்துரைத்தார். மேலும் பள்ளிகளில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இவ்வாய்வில் பள்ளிகளில் உள்ள வகுப்பறை, கழிவறை, குடிநீர் தொட்டிகள் மற்றும் சுற்றுப்புற வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணியினை பார்வையிட்டார். தேவையற்ற பொருட்கள் எவையேனும் பள்ளிகளில் இருப்பின் அதனை அரசு வழிகாட்டுதல் கொண்டு அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அனைத்து பள்ளிகளின் நுழைவாயில்களில் கிருமி நாசினி கட்டாயம் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உடன் முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வன், நகராட்சி ஆணையர் லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.

Related Stories:

>