காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி மத்திய அரசிடம் காமராஜர் துறைமுகத்தில் கண்டித்து சிஐடியு மீஞ்சூர் பகுதி பொதுதொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து சிஐடியு மாநில துணை தலைவர் விஜயன் தலைமையில் மீஞ்சூர் பகுதி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: