×

மின்வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: மின்வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினம் அமைச்சர் செந்தில்பாலாஜி, மானியகோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அணைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.   பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 17 தொழிற்சங்க சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றன. மின்வாரியத்தில் 1 லட்சத்து, 45 ஆயிரம்  பணியிடங்களில் ஏறத்தாழ 55 ஆயிரம்  பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.  

இந்தப் பணியிடங்கள் படிப்படியாக  நிரப்ப வேண்டும் என கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர்  முன்  வைத்து இருக்கிறார்கள். இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று படிப்படியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  நிலக்கரியை பொறுத்த வரைக்கும் வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் முதல்வரின் அனுமதிபெற்று 2.8.2021 அன்று ஒரு குழு அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு,   அந்த ஆய்வின் அடிப்படையில்  2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி  பதிவிற்கும், இருப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சொன்னோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசில் நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : Electricity Board ,Minister ,Senthilpalaji , Electricity Board, Vacancy, Minister Senthilpalaji,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி