×

கே.டி.ராகவனை தண்டிக்க வேண்டும்: பாஜ நடிகைகள் ஆவேசம்

சென்னை: பா.ஜ. தமிழ் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து அவர் கட்சி பதவியை ராஜினாமா செய்தார். குழு அமைத்து அவர் மீது விசாரணை நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:  என் கண்களையே என்னால் நம்ப முடியாத அளவிற்கு  அதிர்ச்சியான சம்பவமாக இருந்தது. சட்டம் அனைவருக்கும் சமமானது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தண்டிக்கவில்லை என்றால் தெய்வம் கண்டிப்பாக தண்டிக்கும் என்று கூறியுள்ளார்.

பாஜவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது: தமிழக பா.ஜ.விலும், தேசிய பா.ஜ.விலும் எனக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. பாரதிய ஜனதா கட்சியில் பெண்கள் மதிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு வேதனை அளிக்கிறது என்றார்.

Tags : Ragavan , KD Raghavan, BJP actress, obsession
× RELATED லாரி மீது கார் மோதியதில் எஸ்ஐ உள்பட 3 பேர் பலி