×

பிஎச்.டி., எம்.ஃபில் படிக்க எங்கு விண்ணப்பிக்கலாம்?

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.ஃபில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், தற்போது 2021-22ம் கல்வியாண்டிற்கான பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.tnteu.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த= விண்ணப்பத்தை உரிய  சான்றிதழ்களுடன், ‘பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்,  கங்கை அம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், சென்னை 600 097’ என்ற முகவரிக்கு  செப்.15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ph.D., M.Phil, Application
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...