ரூ.1.5 கோடி மோசடி ஆசாமி சிக்கினார்

சென்னை: ஆவடி கோவில்பதாகை கலைஞர் நகரை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘ஏஞ்சல் டிரேடிங் என்ற  பெயரில் 100 நாட்களில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ஏமாற்றி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு’ கூறியிருந்தார். பிறகு இந்த புகார் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 100 நாட்களில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி www.aangeltrading.com என்ற நிறுவனம் மூலம் 30,000த்திற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்த கோட்டூர்புரம், பாரதி அவென்யூவை சேர்ந்த தியாகபிரகாசம்(43), என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>