×

விஜயகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது டிவிட்டரில்: தேமுதிக நிறுவனரும், தமிழ் மக்களின் அன்புக்குரியவருமான நண்பர் விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல் நலத்துடன், மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

உதயநிதி: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர்- கலைஞரின் அன்பிற்குரியவர் கழக தலைவரின் நண்பர் மிக முக்கிய ஆளுமை விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.’’ என கூறியுள்ளார். அதேபோல  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Vijaykanth , Vijayakand, Chief Minister MK Stalin, Greetings
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...