×

நாமக்கல், சேலத்தில் உள்ள 5 கூட்டுறவு வங்கிகளில் மட்டும் அதிமுகவினர் ரூ.7 கோடி தங்க நகைகள் கையாடல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருத்தணி சந்திரன் (திமுக)  பேசியதாவது: உழவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்யாத சாதனையான வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். இன்றைக்கு வளம் இல்லை, கஜானா காலி. சென்ற ஆட்சியில் நகைக்கடன் மோசடி என்று செய்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சீர்கெட்டுபோன கூட்டுறவு துறைகளில் நடைபெற்ற முறைகேடுகளை ஆராய தனியாக குழுக்களை அமைத்து விரைவு விசாரணை நடத்தி நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அரக்கோணம் ரவி (அதிமுக) உறுப்பினர் பேசும்போது, கடந்த ஆட்சியில் நகைக்கடை மோசடி என்று தவறான வார்த்தை பயன்படுத்தியுள்ளார். அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.துணை சபாநாயகர் பிச்சாண்டி: அதிமுக உறுப்பினர் பேசும்போது, அதற்கான விளக்கத்தை கூறலாம். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்: தாய்க்கோ வங்கி என்று ஒரு வங்கி 42 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

அதில் நாமக்கல், சேலம் அந்த பகுதிகளில் 5 வங்கிகளில் 7 கோடி ரூபாய்க்கு மேல் தங்க நகைகளை எடுத்துவிட்டு போலி நகைகளை வைத்து ரூ.7 கோடிக்கு மேல் கையாடல் செய்துவிட்டு, அவர்களே வழக்கு போட்டுள்ளனர். அதில் ஜெயிலுக்கு போயிட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அரசு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 42 வங்கிகளில் உள்ள நகைகளையும் இன்றைக்கு ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags : AIADMK ,Namakkal ,Salem ,Minister ,Thamo Anparasan , Co-operative Bank, AIADMK, Gold Jewelery, Minister Thamo Anparasan
× RELATED கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில்...