×

சென்னை பொறியாளரை கொன்ற விவகாரம்; ‘சயனைடு’ வழக்கில் ஐகோர்ட் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சென்னை கம்ப்யூட்டர் பொறியாளரை சோடியம் சைனைடு கொடுத்து கொலை செய்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் இவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு படித்திருந்தனர். அவர்களுக்கு வேலை கிடைக்காததால், அதேபகுதியை சேர்ந்த வேலன் மற்றும் அவரது பெண் நண்பர் பாரதியை சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும், கார்த்திக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.

கார்த்திக் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. சில மாதங்கள் கழித்து, பணி நியமன ஆணை வந்துள்ளதாக கூறி கார்த்திக் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோரை, அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து, கோயில் பிரசாதம் எனக்கூறி ஏதோ ஒன்றை இருவருக்கும் கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கார்த்திக், சோடியம் சயனைடு கொடுத்து கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், வேலன் மற்றும் பாரதி மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாரதியை விடுவித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கார்த்திக்கின் மனைவி சரண்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் மற்றும் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதில், ‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கார்த்திக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய வேலன், அவரது நண்பரான பாரதியை அறிமுகம் செய்து இருந்தாலும், அவருக்கும் அனைத்து விபரங்களும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவரும் இந்த வழக்கில் குற்றவாளிதான். எனவே, இதுதொடர்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Chennai ,Supreme Court ,ICC ,Cyanide , Chennai engineer killed; ICC order quashed in 'Cyanide' case: Supreme Court action
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...