எஸ்ஆர்எம் நிறுவனர் பிறந்தநாள் விழாவில் 3 சிறப்பு மையம், வலைதளம் தொடக்கம்

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் தினத்தையொட்டி, வலைத்தளத்துக்கான புதிய அமைப்பு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்ஆர்எம் குழும நிறுவனர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்பி தலைமை வகித்து, வலைத்தளத்தை தொடங்கி வைத்தார். இணை வேந்தர் டாக்டர் பி.சத்தியநாராயணன், 3 சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். இந்த சிறப்பு மையங்களில் பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் கிரானியா முக முரண்பாடுகளின் பிரிவு, குழந்தைகளின் சில குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்காவை சேர்ந்த ‘ஸ்மைல் ட்ரெய்ன்’ என்ற தொண்டு நிறுவனம் கைகோர்க்க முன்மொழிந்துள்ளது.

நிகழ்ச்சியில் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் பேசுகையில், ‘இந்த நிறுவனம் இந்தியாவிலேயே சிறந்து விளங்க வேண்டும். நோயாளிகளுக்கு அதிகபட்ச இலவச சேவையை வழங்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இணை வேந்தர் டாக்டர் பி.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது தலைமையின் கீழ் இது ஒரு மருத்துவ கல்லூரியாக மட்டுமே இருந்தது. இப்போது ஒரு அதிநவீன மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வரலாற்றில், இது ஒரு முக்கியமான மைல்கல். எஸ்ஆர்எம் எப்போதும் கல்வியையும் அதனுடன் தொடர்புடைய அனைத்தையும் வழங்குகிறது’ என்றார்.

டாக்டர் பி.சத்தியநாராயணன் பேசுகையில், ‘நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில் அதிக ஆராய்ச்சிகளை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும். எங்கள் குறிக்கோள் ஏழை நோயாளிகளுக்கான பெருநிறுவன சுகாதாரம் கிடைக்க வேண்டும். அனைத்து நோயாளிகளும் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் வழிநடத்தப்படுவார்கள்’ என்றார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் பிறந்தநாள் விழா, ஐஜேகே சார்பில் பல்கலைக்கழக கலையரங்கில் நடந்தது. கட்சியின் மாநில தலைவர் ரவி பச்சைமுத்து தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பி.ஜெயசீலன், மாநில பொருளாளர் ஜி.ராஜன், பார்கவகுல முன்னேற்ற சங்க தலைவர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் எஸ்.முத்தமிழ்செல்வன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர், தனது பிறந்தநாள் கேக்வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். மாநில இணை பொது செயலாளர் லீமாரோஸ் மார்டின், மாநில இளைஞரணி செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன், மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ரவிபாபு, மாநில மகளிரணி செயலாளர் அமுதா உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>