பாஜகவில் இருந்து யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா நீக்கம் : தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உத்தரவு!!

சென்னை : பாஜகவில் இருந்து யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலையை சந்தித்து கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

 

இதேவேளை,பாஜகவின் கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துகளை தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: