சிக்கலில் ஃபிபா ரெட் லிஸ்ட் நாடுகளுக்கு வீரர்களை அனுப்ப முடியாது: கால்பந்து கிளப்கள் அதிரடி அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து அறிவித்துள்ள ரெட் லிஸ்ட்டில் உள்ள நாடுகளுக்கு, வீரர்களை அனுப்ப முடியாது என கால்பந்து கிளப்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. இதனால் உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகளில், தங்கள் நாட்டிற்காக ஆட முடியாமல் வீரர்கள் தவிக்கின்றனர். கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளை பட்டியலிட்டு, இங்கிலாந்து அரசு ‘ரெட் லிஸ்ட்’ வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த ரெட் லிஸ்ட் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு வீரர்களை அனுப்ப முடியாது என கால்பந்து கிளப்கள் அனைத்தும் ஒருமித்த குரலில் அதிரடியாக அறிவித்துள்ளன.

இதனால் உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகளில் தங்களுடைய நாட்டிற்காக ஆட முடியாமல், கால்பந்து வீரர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். அடுத்த வாரம் எகிப்து-அங்கோலா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றுப் போட்டி கெய்ரோவில் நடைபெற உள்ளது. எகிப்தின் முன்னணி கால்பந்து வீரர் மொகமது சலாஹ், தற்போது லிவர்பூல் கிளப்புக்காக ஆடி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் லிவர்பூல் கிளப்பில் இருந்து எகிப்து கால்பந்து அசோசியேஷன் நிர்வாகிகளுக்கு, அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், ‘உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டிக்காக மொகமது சலாஹை, கெய்ரோவுக்கு அனுப்ப முடியாது. கெய்ரோ சென்று, அவர் திரும்பி இங்கு வந்தால், 15 நாட்கள் தனிமைப்படுதிக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் எங்களுக்கு இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவர்பூல் அனுப்பியுள்ள இந்த கடிதத்தால் எகிப்து கால்பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதே போல் பிரேசில் கால்பந்து அசோசியேஷனுக்கும், லிவர்பூல் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் ஆலிசன் பெக்கர், பாபின்ஹோ மற்றும் ரொபர்டோ ஃபிர்மினோ ஆகியோரை, பிரேசிலுக்கு அனுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில்-சிலி இடையேயான உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டியும் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. லிவர்பூல் மட்டுமல்ல ஆர்சனல், யுனைட்டட் மான்செஸ்டர் உள்ளிட்ட அனைத்து கிளப்களும் இந்த முடிவை எடுத்துள்ளன. இதனால் 60க்கும் மேற்பட்ட வீரர்கள், தங்களுடைய நாட்டுக்காக விளையாட முடியாத சோகத்தில் உள்ளனர். மேலும் கிளப்களின் இந்த முடிவு ஃபிபாவுக்கும் (சர்வதேச கால்பந்து கழகம்) சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>