×

நடிகர் விவேக் மரணத்தில் மர்மம்?.. தேசிய மனித உரிமை ஆணையத்திடம் முறையீடு

புதுடெல்லி: நடிகர் விவேக் மரணம் ெதாடர்பாக விசாரிக்கக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மனுவை மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நடிகர் விவேக்குக்கு (58), ஏப்ரல் 16ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும், அடுத்த நாள்  காலை அவரது உயிர் பிரிந்தது.

இவரது திடீர் மரணம், ரசிகர்களையும், திரையுலகினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள், விவேக் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதனால், தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் விவேக் இறந்ததாக சிலர் தெரிவித்தனர். ஆனால், மருத்துவ துறையினர் விவேக்கின் மரணத்திற்கும், தடுப்பூசி போட்டதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இறந்தார். அவருக்கு முறையான பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடவில்லை. எனவே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இவரது புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags : Vivek ,National Human Rights Commission , Mystery over actor Vivek's death? .. Appeal to National Human Rights Commission
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...