மேகதாது அணை கட்ட அனுமதி பெற ஒன்றிய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி சென்று கர்நாடக மாநிலத்திற்கு தேவையான நலத்திட்டங்களை பெற ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டவல்லுனர்களை அழைத்துக்கொண்டு டெல்லி செல்லும் முதல்வர், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி பெற பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளார்.

மேகதாது அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த திட்டம் குடிநீருக்கான திட்டம் மட்டுமே என்று ஒன்றிய அரசிடம் கர்நாடகா தொடர்ந்து வலியுறுத்தி அனுமதி கோரி வருகிறது. இந்நிலையில் இன்று கர்நாடக முதல்வர், அதிகாரிகளுடன் டெல்லி சென்று மேகதாது அணை கட்ட அனுமதிகோரி ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை மூன்றாவது முறையாக சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>